தலைமுடி வளர[-]thalaimudi valara alaku enpathin muthal thuvakkamaaka thalaimudi ullathu, pinpu thaan kan, mookku parkal poanravai.
அழகு என்பதின் முதல் துவக்கமாக தலைமுடி உள்ளது, பின்பு தான் கண், மூக்கு பற்கள் போன்றவை. சங்க கால தமிழ் வீரர்கள் சடை வளர்த்து வெற்றியின் அடையாளமாகி தலையில் பூச்சூடி மகிழ்ந்தனர்.
ஆனால் இன்றோ ஆணோ, பெண்ணோ தலையில் வழுக்கை, முடி கொட்டுதல் போன்றவை சரி செய்ய தனி வருமானத்தில் குறிப்பிடதகுந்த அளவில் செலவழிக்கின்றர்.
கருமையும் செழுமையும் வாய்ந்த அழகான தலைமுடி இளைஞர்களுக்கு ஒரு கம்பீர தோற்றத்தை அளிக்கிறது. ஆனால் இளம் பெண்களுக்கோ கருநிறமான கூந்தல் ஒரு தனிக் கவர்ச்சியை அளிக்கிறது. என்பதில் சந்தேகமே இல்லை எனலாம். எனவே தலைமுடி தொடர்பான பிரச்சனை, பாதுகாப்பு, இயற்கை மருந்துகள் போன்றவற்றிலிருந்து ஆராய்வோம்.
படிக்காத நாட்டுபுற பெண்களிடத்தில் தங்கள் கூந்தலை இயற்கையாக பராமரிப்பது குறித்து அனுபவ அறிவு ஒரளவாவது இருக்கிறது. படித்த பெண்களிடத்தில் அந்த மாதிரி அறிவு கூட தெளிவாகி இல்லை. ஷாம்பூ, செயற்கை இரசாயன அழகு சாதன பொருட்கள் பெருமளவு தீங்கு செய்கின்றன. முடி கொட்டி வீணாவதற்க்கு நரைப்பதற்கு நம்முடைய கவனக் குறைவும், சத்தற்ற உணவும் முக்கிய காரணம்.
தலைமுடி பராமரிப்பு என்பது என்ன ?
அன்றாடம் தலை நனைத்து தாராளமாக நீர் விட்டு குளித்தல் (காக்கை குளியில் குளிக்க கூடாது ) குறைந்த பட்சம் 10 பக்கெட் (வாளி) தண்ணீர் குளிக்கலாம். ஏனெனிறால் நம் முன்னோர்கள் ஆறு, ஏரி,குளம், கிணற்றில் பல மணி நேரம் நீரில் மூழ்கி நீராடினர், முடி பராமரிப்பு முதல் மூளை கோளாறு, புற்றுநோய், தோல் வியாதிகள் உட்பட பல நோய்கள் வராமல் தடுக்க நீண்ட நேர குளிர்ந்த தண்ணீர் தலை முழுகல் அவசியம். தென்னிந்தியர்கள் குறிப்பாக தமிழகத்தில் வசிப்போர், எண்ணெய் தேய்த்து தலை முழுகும் நேரம் தவிர மற்ற நாட்களில் எக்காரணம் கொண்டும் (குளிர் காலத்திலம் கூட )வெந்நீரில் குளிக்க மாட்டார்கள் (வயதானவர்கள் விதிவிலக்கு). ஏனென்றால் கடுமையான நரம்பு தளர்ச்சியும் கொடிய வியாதிகளும் வெந்நீரில் குளிப்பதால் வெப்ப நாடுகளில் வசிப்பவர்களுக்கு பல நோய்கள் ஏற்படுகிறது.
வாரம் ஒரு முறையோ அல்லது மாதம் ஒரு முறையோ ஷாம்பூ (இயற்கை முறையில் தயாரித்து (அல்லது) இரசாயனம் கலவாததை) உபயோகிக்கலாம். எக்காலத்திலும் வீட்டில் சிகைக்காய் அரைத்து வைத்து பயன்படுத்த வேண்டும்.
சிகைக்காய் தயாரிக்கும் முறை
சிகைக்காய் = 1 கிலோ
சேர்த்து நன்கு காய வைத்து அரைத்து பயன்படுத்திடலாம் வெப்பம் தணிந்து தலை குளிச்சியடைந்து கேசம் பொலிவுறும்.
குளித்த பிறகு தேங்காயெண்ணெய் (அல்லது) நல்லெண்ணெய் தடவி தலை சீவுதல். நெருக்கமான பற்கள் இல்லாத சீப்பைக் கொண்டு மென்மையாக தலை சீவுதல், தலைமுடியில் ஆரோக்கியத்தை வளர்க்கிறது. கூடிய சத்துக்களை உணவில் அதிகமாக சேர்த்து கொள்ளுதல்...
சத்துணவு குறிப்புகள்
தலைமுடி செழுமையாகி வளர இரும்பு சத்தும் கொழுப்பு சத்தும் அவசியம். வைட்டமின் சத்தும் மிக அவசியம். முடி செழுமைக்கு வெண்ணெய் , நெய், வேர்கடலை, பருப்பு வகைகள் , கோதுமை போன்றவை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். இரும்பு சத்து மிக்க கருவேப்பிலை, முருங்கை கீரை போன்ற கீரைகள். திராட்சை, பேரீட்சை, மாதுளை, அத்தி பழம் போன்ற பழவகைகளும் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். சிவப்பு முள்ளங்கி, பீட்ருட், போன்றவை ரோம வளர்ச்சிக்கு முக்கியமானவை.
|
|